Sunday, January 12, 2014

விவேகனந்தர்




1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள் நரேந்திரநாத் தத்தா என்ற விவேகானந்தர் இப்பூவுலகில் பிறந்தார். இளம் வயதிலேயே கல்வியிலும், தியானத்திலும் சிறந்து விளங்கிய அவருக்கு கடவுளை பற்றி பலத்த சந்தேகம் எழுந்தது. தனது சந்தேகம் குறித்து பலரிடம் விளக்கம் கேட்டும் உரிய விளக்கங்களை யாரும் கூறாததால், விளக்கத்தை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தார்.

அப்படி ஒரு நாள் சுவாமி ராமகிருஷ்ணரை பார்த்து கடவுளை பற்றிய தனது சந்தேகத்தை கேட்டபோது அவருக்கு ஏற்ற சரியான விளக்கத்தை கொடுத்து அவரை தனது சிஷ்யனாக அவர் ஏற்றுக்கொண்டார். அவரின் சிஷ்யனாக இருந்து பாடம் கற்று தனது வாழ்விலும், பொது மக்கள் வாழ்விலும் பெரும் சாதனை படைத்த, படைக்கவைத்த அவரது பொன்மொழிகளை அனைவரும் பின்பற்றினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்:-

தூய்மை, பொறுமை, விடா முயற்சி இவை மூன்றுமே வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணங்கள். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது அன்பு செலுத்துவது.

எழுந்திருங்கள், விழித்திருங்கள். இலக்கை அடையும் வரை நின்றுவிடாதீர்கள்.



இதயம் உணரவேண்டும். மூளை செயலாற்றவேண்டும். கைகள் பணி செய்யவேண்டும்.

உதவுபவர்களை மறக்காதீர்கள். அன்பு செலுத்துபவர்களை வெறுக்காதீர்கள். நம்புபவர்களை ஏமாற்றாதீர்கள்.

மற்றவருக்கு நன்மை செய்ய எப்பொழுதும் உங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வார்த்தைகள் இரண்டாம் பட்சம். எண்ணங்கள் வாழக்கூடியது. அது நீண்டதூரம் பயணம் செய்துகொண்டேயிருக்கும்.

நம்மை நாம் காயப்படுத்திக்கொள்வதை விட உலகத்தில் நம்மை காயப்படுத்திவிடக்கூடிய சக்தி எதற்குமில்லை.

உங்களை நீங்கள் நம்பும்வரை கடவுளை நீங்கள் நம்பாதீர்கள்.

வீரனாக இருங்கள். எப்பொழுதும் எனக்கு பயமில்லை என கூறிக்கொண்டேயிருங்கள்.

வாழ்க்கை வலிமையானது. மரணம் பலவீனமானது.

No comments:

Post a Comment

நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்

#நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்.... என் சிலையின் தலையை உடைக்க காரணம் - என் சிலைக்கும் உயிர் இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.! என் சிலையின் பீ...