Wednesday, December 11, 2013

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகில் உள்ள ஓணங்குடி ஊராட்சி மற மடக்கி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் குமாரவேல் (வயது 33). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 8–ந்தேதி இரவு சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்னும் இடத்தில் தனியார் பஸ் மோதி குமாரவேலு தலை நசுங்கி பலியானார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் விபத்தில் இறந்த குமார வேலுவை பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் தான் சிங்கப்பூரில் இருந்து குமார வேலுவின் வீட்டிற்கு கடிதம் வந்துள்ளது. அதில் குமாரவேலு விபத்தில் இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடிதம் வந்தபோது குமார வேலுவின் தாய் ராஜலட்சுமி நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மகன் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு மயக்கம் தெளிவித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். காட்டுதீயாக பரவிய தகவல் கேட்டு குமார வேலுவின் உறவினர்களும், ஊர் மக்களும் அவரது வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
குமார வேலுவின் உடல் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி இன்று காலை சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் குமாரவேலுவின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சொந்த ஊரான மறமடக்கி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
சிங்கப்பூரில் சாலை விபத்தில் இறந்த குமார வேலுவின் தந்தை சக்திவேல் 2007–ம் ஆண்டு இறந்து விட்டார். அவரது தங்கை மகேஸ்வரியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீரனூரில் மர்ம நபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். தற்போது குமாரவேலுவும் இறந்து விட்டார். இதனால் அந்த குடும்பத்தின் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
அடுத்தடுத்து கணவர், மகள், மகன் இறந்ததால் மனம் உடைந்த ராஜலட்சுமி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் ராஜலட்சுமியை காப்பாற்றினர். இச்சம்பவங்களால் மறமடக்கி கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.   
சிங்கப்பூர் விபத்தில் இந்தியர் பலி: இறந்தவர் உடல் இன்று விமானத்தில் சென்னை வந்தது

No comments:

Post a Comment

நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்

#நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்.... என் சிலையின் தலையை உடைக்க காரணம் - என் சிலைக்கும் உயிர் இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.! என் சிலையின் பீ...