Sunday, December 15, 2013



நெல்சன் மண்டேலா மரணம் பற்றி?

சிறுவனான மண்டேலா சாலையில் நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, வாகனத்தில் சென்ற ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியின் கைப்பை கீழே விழுந்தது. ஓடிப்போய் அதனை எடுத்து, அந்தப் பெண்மணியிடம் இவர் கொடுத்தார். ஒரு கறுப்பன் தன்னுடைய பையைத் தொட்டுவிட்டானே என்ற ஆத்திரத்தில், மண்டேலாவின் கன்னத்தில் ஓங்கி அடித்த அந்தப் பெண், பையைத் தூக்கி வெளியில் வீசிவிட்டுப் போனார். 'நாம் உதவிதானே செய்தோம்... எதற்காக அவர் நம்மை அடித்தார்?’ என்று அந்த சிறுவன் மண்டேலா நினைத்தான். அது பற்றியே யோசித்தான். கறுப்பர்களுக்காக மட்டுமல்ல, அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மனிதர்களின் பிரதிநிதியாகவும் அவர் மாறினார். தன்னுடைய சொந்த மண்ணை ஆண்டுகொண்டிருந்த அந்நியர்களான வெள்ளையர்களை அகிம்சையின் பேரால் மண் கவ்வ வைத்த அந்தத் தலைவனின் இறுதி அஞ்சலிக்கு 90 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் வந்துள்ளார்கள். இனி இப்படி ஒரு உலகத் தலைவன் இல்லை என்ற ஏக்கத்தையும் சேர்த்து விதைத்துவிட்டுப் போய்விட்டார் மண்டேலா.

No comments:

Post a Comment

நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்

#நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்.... என் சிலையின் தலையை உடைக்க காரணம் - என் சிலைக்கும் உயிர் இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.! என் சிலையின் பீ...